சர்வதேச பெண்கள் தினமான ஞாயிறன்று (மார்ச் 8) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மத்திய சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக அண்ணாநகர் பகுதி, எம்எம்டிஏ காலனியில் நடைபெற்ற நிகழ்வுக்கு பகுதித் தலைவர் எம்.உஷா தலைமை தாங்கினார். மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வே.தனலட்சுமி, பகுதிச் செயலாளர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பேசினர்.