tamilnadu

img

வடிகால், பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தல்

வடிகால், பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தல்

பாபநாசம், அக்.16- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உக்கடை ஊராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சேகர், சரவணன், கிளைச் செயலர் அய்யாசாமி, பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூறுநாள் வேலைக்கான ஜாப் கார்டு கொடுத்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை பார்த்த அனைவருக்கும் பாக்கி வைக்காமல் உடனுக்குடன் சம்பளம் வழங்க வேண்டும். உக்கடை -  சேர்மாநல்லூர் சாலையை செப்பனிட வேண்டும். சேர்மாநல்லூர் பட்டியல் சமூக மக்களுக்கு மயான சாலையுடன், கொட்டகையும் அமைத்து தர வேண்டும். உக்கடை ஊராட்சி மகளிர் சுகாதார வளாகம் பாழடைந்து பயனற்று, சமூக சீரழிவிற்கான இடமாகவும், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகவும் உள்ளது. ஊராட்சி முழுவதும் உள்ள வடிகால், பாசன வாய்க்கால்களை தூர்வாரி பேண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் நேரில் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தனர்.