tamilnadu

11 எம்எல்ஏக்களிடம் விசாரணை

சென்னை, ஆக. 27- முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப் பட்டனர். இவர்களில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தனர். இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் அரசு மீது  நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெ டுப்பு நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 பேரும் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவின்படி தான் சட்டப்பேரவையில்  எம்.எல்.ஏ.க்கள் வாக்க ளிக்க வேண்டும். இந்த தீர்மானத்தில் கொறடாவின் உத்தரவுப்படி அரசுக்கு சாதகமாக 11 எம்.எல்.ஏ. க்கள் வாக்களிக்கவில்லை. எனவே, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பார்த்திபன் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்தனர். பின்னர், இந்த விவகாரம் சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பேரவைத் தலைவர் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றம் தலை யிடாது என்று 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. அதில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யுள்ளார் என்று தமிழக சட்டப் பேரவை தரப்பில் வாதிடப்பட்டது. எனவே சட்டத்தின் அடிப்படையில் பேரவைத் தலைவர் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையை தெரி வித்து மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. இந்தநிலையில் திமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பேர வைத் தலைவர் தனபால் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலை யில், 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் அளித்த 6 பேருக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அளித்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர் பாக 11 எம்.எல்.ஏ.க்களி டம் பேரவைத் தலைவர் ப.தனபால் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்துவார் என்று கூறப் பட்டது. அதன் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களில் முதல்கட்டமாக பாண்டியராஜன், நட்ராஜ் ஆகியோரி டம் விசாரணை நடத்தினார்.