tamilnadu

img

தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம்: சிறப்பு கருத்தரங்கம்

சிதம்பரம், செப். 27- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல், பொறியியல் துறையின் சார்பில் “கணக்கீடு, தகவல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றங்கள்” எனும்  தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடை பெற்றது. பொறியியல் துறை முதல்வர் ரகு காந்தன் தலைமை தாங்கினார். கணினி அறி வியல்-பொறியியல் துறையின் தலைவர் அருணா வரவேற்றார். பல்கலைக் கழக பதி வாளர்(பொ) கிருஷ்ணமோகன்  துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மலேசியாவிலுள்ள மல்டிமீடியா பல்கலைக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் சரவணன் முத்தையா கலந்து கொண்டு, கணினிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப வளர்சிகளையும், புதிய மென்பொருட்களின் பயன்பாட்டினையும் செயற்கை நுண்ணறிவு பெற்ற இயந்திரங்களை உருவாக்கும் முறையையும் அதன் தேவைகளையும் விரிவாக விளக்கினார். இந்த கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற் பட்ட நவீன தொழில் நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட் டுள்ளன. சிறந்த கல்வியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, விவாதம் மற்றும் கலந்துரையாடல் நடத்தினர். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் சுதாகர் கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தார். முனைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

;