சென்னை தரமணியில் உள்ள டிஎல்எப் வளாகத்தில் டிட்கோ மற்றும் டிஎல்எம் நிறுவனம் இணைந்து உருவாக்கவிருக்கும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான டிஎல்எப் டவுன் டவுன் (DLF Down Town) வளாகத்திற்கு வியாழனன்று (ஜன. 23) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, மாதிரி கட்டட வடிவமைப்பை பார்வையிட்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோரும், அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.