tamilnadu

img

இந்தியன் ஆயில் தமிழ்நாடு செயல் இயக்குநர் பி.ஜெயதேவன்

சென்னை, ஜூன் 3-இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) தமிழ்நாடு மற்றும்புதுச்சேரி மாநில செயல் இயக்குநராக பி.ஜெயதேவன் பொறுப்பேற்றுள்ளார்.அந்த பதவியில் இருந்து ஆர்.சித்தார்த்தன் பதவி ஓய்வு பெற்றதையடுத்து ஜெயதேவன் பொறுப்பேற்றுள்ளார். இவர் இந்திய நிறுவனத்தின் தமிழ்நாடு புதுச்சேரி எண்ணை தொழிலின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்.ஜெயதேவன் எண்ணைத்துறையில் சமையல் எரிவாயு துறையின் செயல்பாடுகள், பொறியியல் மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஆழ்ந்த அனுபவம் உடையவர். சிவில் இன்ஜினியரான அவர் ஸ்லோவேனியா நாட்டின் பல்கலைக் கழகத்தில் பெட்ரோலிய படிப்பில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.இந்த பணிக்கு முன்பு ஜெயதேவன் டில்லியில் உள்ள இந்திய ஆயில் நிறுவனத்தின் நிர்வாகஅலுவலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு எண்ணை மற்றும் எரிவாயு துறையில் உலகளாவிய முக்கியதொழில் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உண்டு.  

;