சென்னை:
இந்தியன் ஆயில் கழக தமிழ்நாடு மாநில அலுவலகமும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்)–ம் ஒருங்கிணைந்து, நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு), முனைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசின் கோவிட் தடுப்பூசி செயல்திட்டத்திற்கு தங்களது பங்களிப்பாக ரூ.3.12 கோடியை வழங்கியுள்ளன.
தமிழ்நாடெங்கும் கோவிட் தடுப்பூசி மருந்துகளின் சேமிப்பு மற்றும் போக்குவரத்து வசதிக்காக ஐஸ்லைண்டு ரெஃப்ரிஜிரேட்டர்கள், டீப் ஃப்ரீசர்கள், வாக்-இன் கூலர்கள் மற்றும் குளிர்சாதன வசதி செய்யப் பட்ட டிரக்குகளை கொள் முதல் செய்வதற்கு ரூ.3.12 கோடி என்ற தொகையை பங்களிப்பு செய்வதற்கு தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதன்மை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந் தத்தில் இந்தியன்ஆயில் நிர்வாக இயக்குனரும் மற் றும் மாநில தலைவருமான ெஜயதேவன் கையெழுத்திட்டார்.