tamilnadu

img

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்க.... ஆளுநரிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்   சந்தித்துள்ளார். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்,  தயாநிதிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.  ஆளுநரை சந்தித்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது கூறுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்தினோம். மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கடிதம் கொடுத்தோம்” என்றார்.ஆளுநரிடம் வழங்கப்பட்ட கடிதத்தில்,  “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சிறையில் நீண்டகாலம் வேதனையை அனுபவித்து வரும் நளினி, ஸ்ரீகரன் என்கிற முருகன், சாந்தன் பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிக்குமாறு திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதை, தங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.தங்களுக்கு, அந்த கடிதத்தில் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான, சரிசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்துவதுடன், அநீதி இழைப்பதும் ஆகும்.னவே ஏழுபேரின் ஆயுள் தண்டனையையும் குறைத்து உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்”.

;