மத்திய வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை
நாட்டின் பொதுத்துறை வங்கியான இந்திய மத்திய வங்கியில் (CBI Bank) பயிற்றுநர் பிரிவில் எண்ணற்ற பணியிடங்கள் காலியாக இருப்ப தாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : பயிற்றுநர் (ஆசிரியர் - Faculty)
பணியிடங்கள் : எண்ணற்ற (Various)
கல்வி : அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BA, B.Sc, B.Ed, MA, MSW மற்றும் முதுநிலையில் பட்டம் பெற்றவர்கள்.
வயது வரம்பு : 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் : ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை : தகுதியானவர்கள் https://docs.google.com/document/d/18GzHDCGCECyZ_e-WxekzoWmCqHQ0lvl7/edit என்ற தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 15.01.2024
பொறியாளர்களுக்கு கிரிட் இந்தியா நிறுவனத்தில் வேலை
இந்திய அரசு நிறுவனமான கிரிட் இந்தியா (Grid India) நிறுவனத்தில் டிரேட் அப்ரண்டிஸ் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர் : டிரேட் அப்ரண்டிஸ் (Trade Apprentices - Electrical Graduate)
பணியிடங்கள் : 8
கல்வி தகுதி : அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பொறியி யல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள்.
வயது வரம்பு : 10.01.2023 அன்றைய தேதியின் படி 28 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,000/-
தேர்வு முறை : தேர்வு கிடையாது. மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் மூலம் சரிபார்ப்பு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.01.2024
10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை
இந்திய அஞ்சல் துறையில் (India Post) ஓட்டுனர் பணிக்கான காலிப்பணி யிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர் : ஓட்டுநர் (சாதாரண தரம் - Ordinary Grade)
பணியிடங்கள் : 78
கல்வி : அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க லாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இலகு / கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம்.
வயது வரம்பு : 16.02.2024 தினத்தின் படி 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். (OBC – 03 ஆண்டுகள், SC /ST – 05 ஆண்டுகள், அரசு ஊழியர்கள் – 13 ஆண்டுகள், முன்னாள் ராணுவ வீரர்கள் – 03 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன)
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Trade Test / Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாத ஊதியம் : ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன் (விண்ணப்பதாரர்கள் https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/06012024_UPdriver_English.pdf என்ற தளத்தை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவை யான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.02.2024
இன்றுடன் நிறைவு திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்
வேலூா் மாவட்டம் சோ்க்காடில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகம், சா்வதேச புகழ்பெற்ற “நாஸ்காம்” நிறுவனம், இணையதள பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த “ஸ்கில்ஸ்டா” நிறுவனம் இணைந்து திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதி என்ற 2 நாள் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த வேலைவாய்ப்பு முகாம் இன்றுடன் (புதன்) நிறைவு பெறுகிறது.
பங்குபெறும் நிறுவனங்கள் : ஆதித்யா பிா்லா, யூகிட்டாஸ் வங்கி, ஹெச்டிஎப்சி, காலோன் இன்போடெக், பேங்க் சோன், டிவிஎஸ் சப்ளை சைன் சொல்யூஷன், டானா இந்தியா, பாக்ஸ்கான், பாா்லி அக்ரோ.
குறிப்பு : இந்த வேலைவாய்ப்பு முகாமில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.