tamilnadu

‘பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம்’

சென்னை, மே 23-பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த விழாவில் துணைத் தலைவர் வெங் கையா நாயுடு தெரிவித்தார். சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ஆகியவை சார்பில் சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் (பயோலாஜிக்கல் டைவர்சிட்டி) சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவில் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவர் ஏ.கே.ஜெயின் வரவேற்றார்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மக்களவை துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தேசிய பல்லுயிர் பெருக்கக் செயல் திட்டம், நிதி திட்டம் மற்றும் விருதுகள் பெறுவதற்கான தகவல்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை வெளியிட்டு உரையாற்றுகையில், “ 2001 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத் தில் இந்தியாவில் சுமார் 16 லட்சம் ஹெக் டேருக்கு மேற்பட்ட பரப்பிலான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், 10 லட்சத் திற்கும் மேற்பட்ட விலங்குகளும், அரிய வகை தாவர இனங்களும் அழிவின் விளிம் பில் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கடந்த 100 ஆண்டுகளில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பயிர் வகைகள் வயல்வெளிகளிலிருந்து இல்லாமல் போய் விட் டது. இதனால் கோடிக் கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது தற்போதைய உணவு வினியோக முறை 80 விழுக்காடு அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சிறு தானியங்கள் போன்ற குறிப்பிட்ட சில பயிர்களை சார்ந்தே இருக்கிறது” என்றார்.உள்நாட்டு விலங்கின உற்பத்தியும் பாதியாக குறைந்ததோடு, மீன்பிடித் தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேளாண் உயிரி பன்முகத் தன்மை மற்றும் அதனுடன் சார்ந்த நமது பாரம் பரிய உணவு மற்றும் மருத்துவம் தொடர் பான அறிவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக் கப்பட்ட நமது பாரம்பரிய உணவு பழக்க வழக்கம் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதோடு சமச்சீரான ஊட்டச்சத்தை வழங்குவதாக இருந்தது. எனவே பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.நிறைவாக கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா நன்றியுரை நிகழ்த்தினார்.விழாவில் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் செயலாளர் பூர்வஜா ராமச் சந்திரன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிகர் உள்பட மத்திய, மாநில அரசு மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.முன்னதாக ‘ட்ரீ ஆம்புலன்சு’ என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் மரங்களுக்கு என்று பிரத்தியேகமாக முதல் கட்டமாக தொடங்கப் பட்ட ஆம்புலன்சு சேவையை வெங்கையா நாயுடு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

;