tamilnadu

img

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் கள்ளக்குறிச்சியில் திமுக பொதுக்கூட்டம்

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் கள்ளக்குறிச்சியில் திமுக பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி, செப். 22 - கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் சார்பில் “தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்” ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தியாகதுருகத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள சீரணி அரங்கத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளரு மான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு மக்களவை உறுப்பினர் மலையரசன், ஒன்றியச் செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணா துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், ஒன்றியக் குழு தலைவர் தாமோதரன், பேரூராட்சி மன்றத் தலைவர் வீராசாமி, துணைத் தலைவர் சங்கர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, திராவிட இயக்க எழுத்தாளர் டான் அசோக், கழக கொள்கை பரப்பு துணைச் செய லாளர் பெருநற்கிள்ளி, தலைமைக் கழக பேச்சாளர் நாகநந்தினி யுவராஜ் ஆகி யோர் உரையாற்றினர். முன்னதாக “தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்” என்ற தலைப்பில் அனை வரும் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் மாவட்ட கழக துணைச் செயலாளர் புவனேஸ்வரி பெருமாள் நன்றி கூறினார்.