tamilnadu

img

கடும் பனி மூட்டம் ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கடும் பனி மூட்டம் ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

சேலம், அக்.21- தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் மழை மற்றும் கடும் பனி மூட்டம் காரண மாக படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் தொடர் விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணி கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழகத்தின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது ஏற்காடு. இங்கு ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டு மின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற அண்டை மாநி லங்களில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வந்து சுற்றி பார்த்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி பண்டி கையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்க ளுக்கும் சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர். இந்தநிலையில் வட கிழக்கு பருவ மழை காலம் என்பதால் ஏற்காட்டில் செவ்வாயன்று (அக்.21)  காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வியா பாரிகள் வீடுகளிலேய முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தொடர் விடு முறை விடபட்டுள்ளதால் ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள காட்சி முனைகள் மற்றும் பூங்காக்களை சுற்றி பார்க்க முடியாத சூழல் நிலவியது. ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் தவிர்க்க முடியாத முக்கிய இடங்க ளில் ஒன்றான ஏற்காடு படகு இல்லம் தொடர் மழை காரணமாக படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. இதனால் ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் ஏற்காடு படகு இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல், காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வெளியே வர முடியாமல் விடுதி அறைகளிலேயே முடங்கும் சூழல் நிலவியது. மேலும் பெரும்பாலானோர், நாளை பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதாலும், தொடர் மழையாலும் விடுதி அறை களை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.