உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த சுமை பணியாளர்கள் வலியுறுத்தல்
விழுப்புரம், ஆக. 2- உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் பேரவை வலியுறுத்தியுள்ளது. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பேரவை எஸ்.பத்ம நாபன் நினைவரங்கத்தில் மாவட்டத் தலை வர் எம்.பழனி தலைமையில் நடைபெற்றது. சம்மேளனக் குழு பி.ஐயப்பன் வரவேற்றார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் பி.பாஸ்கரன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் துணைச் செயலாளர் எம்.சுரேஷ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.குமார் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் பி.ஏழுமலை வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடாபதி துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டப் பொருளாளர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் ஆர்.அருள் குமார் நிறை உரையாற்றினார். தீர்மானம் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், தனி நல வாரியம் அமைக்க வேண்டும், சரக்கு பரி வர்த்தனை மதிப்பில் 2 சதவீதம் சேமநல நிதி உருவாக்க வேண்டும், சுமைப்பணி தொழி லாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், சுமைப்பணி தொழி லாளர்களுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிர்வாகிகள் 13 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழுவுக்கு மாவட்ட தலைவராக எம்.பழனி, மாவட்ட செயலாளராக பி.குமார், மாவட்டப் பொருளாளராக பி.ஏழுமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.