tamilnadu

img

கடலூரில் கைத்தறி பூங்கா பாவு பாட்டறை தொழிலாளர் மாநாடு கோரிக்கை

கடலூரில் கைத்தறி பூங்கா 
பாவு பாட்டறை தொழிலாளர் மாநாடு கோரிக்கை

கடலூர், செப்.10- கடலூரில் கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும் என்று கைத்தறி சங்க மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.  கைத்தறி நெசவு பாவு பாட்டறை தொழிலாளர் சங்கத்தின் 9ஆவது கடலூர் மாவட்ட மாநாடு கடலூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆர்.கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் எம். கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வேலாயுதம் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.முருகவேல் அஞ்சலி தீர்மாத்தை முன்மொழிந்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட இணைச் செயலாளர் ஜே. ராஜேஷ்கண்ணன் மாநாட்டை துவக்கி வைத்தும், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் மாநாட்டை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தட்சிணா மூர்த்தி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் இ.தயாளனா வரவு,செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட துணைத்தலை வர் ஆர்.ஆளவந்தார் பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.குமார், வி.வெங்கடேசன், ஆர்.ராஜவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீர்மானம் அனைத்து கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களுக்கும் வீடு கட்டுவதற்கான மானிய தொகை ரூ4 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், கைத்தறி நெச வாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு மற்றும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறி விப்பை உடனே நிறைவேற்ற வேண்டும், ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், ஒன்றியஅரசு நூல் விலையை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக ஆர். கல்யாண சுந்தரம், செயலாளராக எஸ்.தட்சணாமூர்த்தி, பொருளாளராக இ.தயாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.