எரிஉலை திட்டத்திற்கு மாற்றாக “பசுமை சென்னை முன்னெடுப்பு” திட்டம்
வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு முன்வைப்பு
சென்னை, ஆக. 28- பெருநகர சென்னை மாநகராட்சி முன்மொழிந்துள்ள கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு மாற்றாக, “பசுமை சென்னை முன்னெ டுப்பு” என்ற மாற்று திட்ட முன்வடிவை வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரி யாவை சந்தித்து வழங்கினர். பின்னர் இதுகுறித்து கூட்டமைப் பின் தலைவர் டி.கே.சண்முகம் செய்தி யாளர்களிடம் கூறுகையில், வடசென் னையை நச்சு நகரமாக மாற்றும் எரி உலை திட்டத்திற்கு ஒரு மாற்று திட்ட முன்வடிவை அளித்து, அந்த திட்டம் குறித்து விளக்கினோம். சென்னை யில் உருவாகும் மொத்த குப்பைக் கழிவு களையும் உரமாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உரமாக்கிய பிறகு உள்ள மொத்த ஈரக்கழிவுகளையும் அதை முழுவதுமாக உரமாக்குவ தற்கான திட்டத்தையும் அளித்துள் ளோம். மொத்தம் சேகரமாகும் 7,500 டன் குப்பைக் கழிவுகளில் 2,260 டன் குப்பை கள் உலர் கழிவுகள் முழுவதையும் எரி உலை மூலம் எரிக்க உள்ளனர். ஆனால் இதில் வெறும் 200 டன் மட்டுத்தான் மக்காத குப்பைகள். மீதமுள்ள அனைத்து குப்பைகளையும் மறு சுழற்சி செய்ய முடியும். வேறு உபயோகத் திற்கு தேவையான பொருட்களை அதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். மீதமுள்ள குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டாமல், மக்களின் ஆரோக்கி யத்திற்கு பாதிப்பு இல்லாமல் அதை அழிக்க முடியும். எரிஉலை மூலம் 2,100 டன் குப்பை களை எரித்தால் 500 டன் சாம்பல் வரும், உமிழ்வில் இருந்து வடிகட்டுவதில் 50 டன் சாம்பல் வரும். இந்த 550 டன் சாம்பலை எங்கே கொட்ட முடியும் என்ற கேள்வி உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஹைதராபாத் ஜவகர் நகரில் உள்ள எரிஉலை ஆலை யில் இருந்து வெளியேறும் சாம்பல் களை அங்குள்ள குப்பை மேட்டில் கொட்டுகிறார்கள் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது. அந்த நச்சு சாம்பல்களை எங்கு கொட்டினா லும் அது மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவேதான் எரிஉலை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், எரிஉலை அல்லாத நிலத்தில் கொட்டாத பூஜ்ஜியம் கழிவு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளோம். இந்த மாற்று திட்டத்தின் மூலம் வட சென்னை நச்சு நகரமாக மாறுவதை தடுக்க முடியும். மக்களின் ஆரோக்கி யத்தை பாதுகாக்க முடியும். எதிர்கால சந்ததிகளை காப்பாற்ற முடியும். எரி உலை ஆலை நிறுவுவதை கைவிட்டு பயோ மைனிங் செய்து மீட்டு எடுக்கப் படும் நிலத்தில் ஒரு சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் பன்நோக்கு ஆராய்ச்சிகளை நடத்தும் அளவிற்கு பிரமாண்டமான நூலகம் அமைக்க வேண்டும். இவை களை நிறைவேற்றினால் உயிர் கொல்லியாக இருந்த ஒரு குப்பை மேட்டை கரைத்த உண்மையை வரலாறு நினைவில் கொள்ளும் என்றும் தெரிவித்தோம். ஆணையர், திடக்கழிவு மேலாண்மை உதவி ஆணையர், உதவி பொறியாளர்களிடம் இதுகுறித்து விவாதித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், மீண்டும் கூட்டமைப்பு நிர்வாகி களோடு கலந்து பேசப்படும் என்றும் மேயர் தெரிவித்தார் என்று டி.கே.சண்முகம் கூறினார். இதில் பொதுச்செயலாளர் ஆர்.ஜெயராமன், பொருளாளர்ஆர்.பொன்னுசாமி, அமைப்பு செய லாளர் எஸ்.ஏ.வெற்றிராஜன், சட்டத் துறை செயலாளர் பி.அருண்குமார், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சைதன்யன் தேவிகா குலசேகரன், ஜியோ டாமின்(பூவுலகின் நண்பர்கள்), பிரசாந்த்(ஈரநில ஆராய்ச்சி யாளர்),நிரஞ்சன் பட்நாயக், சரத், சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
