tamilnadu

img

சென்னையில் படிப்படியாக நோய்த்தொற்று குறைந்து வருகிறது: அமைச்சர் காமராஜ்

சென்னை:
சென்னை கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட வடபழனி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகக்கவசம் அணிதல் சமூக விலகலை கடைபிடித்தல் ஆகியவற்றை பொதுமக்களிடையே வலியுறுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தனியார் தன்னார்வலர் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெருப்பில் சாகசம் செய்தல், தாரை தப்பட்டை உடன் கூடிய சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சைக்கிளில் மூலமாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.“சென்னையில் உள்ள 39,000 தெருக்களில் 9000 தெருக்களில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் படிப்படியாக தொற்று குறைந்து வருவதாகவும், இந்திய அளவில் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக தெரிவித்தார்.சென்னையில் இதுவரை 96 சதவீதகுடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் மீதம் இருக்கும் பலர் சொந்த ஊருக்கு சென்று இருக்கும் சூழலில் தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.உயர்நீதிமன்றம் உத்தரவை ஏற்று வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

;