ஆளுநரைப் பொறுத் தளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்று சென்னையில் அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆளுநர் போடும் முட்டுக் கட்டைகள் எல்லாம் முறி யடித்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்திச் செல்கிறார் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் தமிழ்நாட்டின் ஆளு நராக செயல்படவில்லை. மாறாக ஆர்எஸ்எஸ்- ன் தமிழ்நாடு மாநிலத் தலை வராகவும், பா.ஜ.க.மாநிலத் தலைவராகவும் செயல்படு கிறார்.
மனிதனைப் பிரித்தாள் வது, சாதி, மத பிரிவினை யைத் தூண்டுவது போன்ற வற்றைத் தான் ஆளுநர் தன்னுடைய பணியை மேற்கொண்டு வருகிறார். ஆளுநருக்கு உண்டான பணிகளிலிருந்து அவர் தவறி விட்டு தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.