காஞ்சிபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, 43ஆவது நாளாக திங்களன்று (செப்.29) தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சினிவாசன் தலைமையில், கரூரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 41 பேருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
