ஒப்பந்த ஊழியர்களுக்கும் போனஸ் தர வேண்டும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் கோரிக்கை
சென்னை, அக். 17 - மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஓட்டுநர், நடத்து நர்களுக்கும் போனஸ், கருணைத்தொகை வழங்க வேண்டும் என்று அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் கோரி யுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில், 2023ஆம் ஆண்டு முதல் பணிமனை பராமரிப்பு பிரிவில் 500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பணி புரிகின்றனர் என்றும், 2024ஆம் ஆண்டு முதல் ஓட்டுநர், நடத்துநர் என 2,400 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடத்துநர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். போனஸ் சட்டம் அனைத்து நிறு வனங்களுக்கும் பொருந்தும் என்பதால், 30 நாட்களுக்கு மேல் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 3,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி அடிப்படையில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை 20விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. நிரந்தர ஓட்டுநர்களுக்கு ஸ்டியரிங் அலவன்ஸ், நடத்துநர்களுக்கு ரிஸ்க் அலவன்ஸ் மற்றும் கலெக்ஷன் பேட்டா வழங்கப்படுகிறது. அதே பணியைச் செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இவற்றை மறுப்பது பாகுபாட்டை உருவாக்குகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்த ஊழியர்களுக்கும் கலெக்ஷன் பேட்டா, ரிஸ்க் அலவன்ஸ், வார ஓய்வு, பண்டிகை நாட்களில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி புள்ளி உயரும்போது அரசின் குறைந்தபட்ச கூலி சட்டப்படி அட்டவணை தொழில்களுக்கு உயர்வு அறிவிக்கப்படுவதைப் போல, ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலியை உயர்த்த வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.