tamilnadu

img

துறைமுகம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி வாலிபர் சங்க பகுதி மாநாடு கோரிக்கை

துறைமுகம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி

வாலிபர் சங்க பகுதி மாநாடு கோரிக்கை

சென்னை, ஜூலை 22 - துறைமுகம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வாலிபர் சங்கம் துறைமுகம் பகுதி ஒருங்கிணைப்புக் குழு மாநாடு ஞாயிறன்று (ஜூலை 20) மண்ணடியில் நடைபெற்றது.  மாநாட்டில், 56வது வட்டம் திருவள்ளுவர் நகர்  மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொது கழிப்பறை  அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சிபி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பிரபா வரவேற்றார், பூஜா அஞ்சலி தீர்மானத்தை வசித்தார், மத்திய சென்னை மாவட்டத்  தலைவர் ஜா.பார்த்திபன் மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை பகுதி ஒருங்கிணைப்பாளர் மகேஷ்வரன் சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் லோ.விக்னேஷ் நிறைவுறையாற்றினார். ரேவ் கிளைச் செயலாளர் ராஜன் நன்றி கூறினார். 11 பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலைவராக விக்னேஷ்,  செயலாளராக மகேஷ்வரன், பொருளாளராக சிபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.