அரசு ஊழியர் தம்பதியர் உடல் தானம்
கிருஷ்ணகிரி, ஜூலை 18 - அரசு ஊழியரான எம்.நந்தகுமார் மற்றும் அவரது இணையர் யு.அம்ரிதா இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்டப் பொருளாளரும், தமிழ்நாடு அரசு மின்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளருமான எம்.நந்தகுமார் மற்றும் அவரது இணையர் யு.அம்ரிதா ஆகிய இருவரும், தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தின மான இன்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு முழு உடல் தானம் வழங்க ஒப்புதல் பாரத்தை கல்லூரி முதல்வர் எம்.பூவதி இடம் வழங்கினர். கல்லூரி முதல்வர் அதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.சந்திரன், செயலாளர் கல்யாண சுந்தரம், மேனால் செயலாளர் நடராஜன், நிர்வாகி கள் ஜெகதாம்பிகா, தினேஷ் ஆகியோர் கலந்து கொண்ட னர். மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் அறிவியல் பார்வை மற்றும் முற்போக்கு சிந்தனை யுடன் உடல் தானம் வழங்கிய சங்க பொருளாளர் நந்த குமார் மற்றும் அவர் இணையரை அனைவரும் வாழ்த்தி னர்.