tamilnadu

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது....

சென்னை:
சென்னையில் வெள்ளியன்று (ஜூலை 16) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.36,528-க்கு விற்பனையானது.தங்கம் விலையில் கடந்த 3 நாட்களாக உயர்வு காணப்பட்டு வந்த நிலையில் வெள்ளியன்று குறைந்தது.வியாழனன்று (ஜூலை 15) தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 600-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் வெள்ளியன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 72 குறைந்து ரூ.36 ஆயிரத்து 528-க்கு விற்றது. ஒரு  கிராம் ரூ.4 ஆயிரத்து 566-ஆக உள்ளது.வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.74 ஆயிரத்து 700-ஆக உள்ளது.

;