சென்னை, மார்ச் 27- சென்னையில் ஆபரண த்தங்கத்தின் விலை கடந்த 19ஆம் தேதி சவரன் ரூ.49,080-க்கு விற்பனை யானது. அதன் பின் சவரன் ரூ.49ஆயிரத்திற்கு மேலேயே விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் புதன் கிழமை சவரன் விலை மேலும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,720-க்கும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,215-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கும், பார் வெள்ளி ரூ.80,200-க்கும் விற்கப்படுகிறது.