சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத்திட்டம்
பொதுத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை, ஜூலை 28 - சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று சென்னை செங்கல்பட்டு லோடிங் அண்லோடிங் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் வலியுறுத்தி உள்ளது. அமைப்பின் ஆண்டு பேரவை கூட்டம் ஞாயிறன்று (ஜூஐல 27) கிண்டியில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், ஒப்பந்த தாரர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் பா.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-1ன் தலை வர் டி.பண்டாரம்பிள்ளை மாநாட்டை தொடங்கி வைத்தார். வேலை அறிக்கை செயலாளர் ம.நீலமேகமும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சம்சுதீனும் சமர்ப்பித்தனர். சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் எஸ்.சந்தானம் நிறைவுரையாற்றினார். 13 பேர் கொண்ட நிர்வாகக் குழுவின் கவுரவத் தலைவராக பா.பாலகிருஷ்ணன், தலைவராக எச்.சம்சுதீன், செயலாளராக எம்.நடராஜன், பொருளாளராக எம்.ரவிச்சந்திரன் ஆகியோர்தேர்வு செய்யப் பட்டனர்.