tamilnadu

img

கேங்மேன் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

கேங்மேன் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

கோவை, அக்.7- கள உதவியாளர் பதவி மாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்க்கப் படாத கோரிக்கைகளை நிறைவேற்ற  வலியுறுத்தி கேங்மேன் பணியாளர்கள்  தமிழகம் தழுவிய காத்திருப்புப் போராட் டத்தில் செவ்வாயன்று ஈடுபட்டனர். மின்வாரியத்தில் உள்ள கேங்மேன்  பணியாளர்களுக்கு, கள உதவியாளர் பதவி மாற்றம் வழங்க வேண்டும். கேங் மேன் பணியாளர்களுக்கு வழங்க வேண் டிய ஆறு சதவீத ஊதிய உயர்வை வழங்க வேண்டும், உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாயன்று நடை பெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக கோவை டாடா பாத் பகுதியில் உள்ள மண்டல தலைமை மின் பொறியாளர் அலுவல கம் அருகே நடைபெற்ற போராட்டத் திற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பு (சிஐடியு) கோவை மண் டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ் ணன் தலைமை வகித்தார். சிஐடியு  மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, துவக்கவுரையாற்றினார். இந் திய மின் ஊழியர் கூட்டமைப்பின் பொரு ளாளர் எஸ்.ராஜேந்திரன், சிஐடியு மாவட் டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில  துணைத்தலைவர் எஸ்.கலைச்செல்வி, மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பி.விவேகானந் தன், ஆர்.சோமசுந்தரம், ஆர்.செபாஸ்டி யன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த போராட்டத்தில், இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர் கள் பணியை புறக்கணித்து தொடர் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து எஸ்.ராஜேந்திரன் கூறு கையில், 2021 இல் கேங்மேன் என்ற ஒழிக் கப்பட்ட பதவியை கொண்டுவர நாங் கள் எதிர்ப்பு தெரிவித்தோம். கள உதவி யாளர்களாக இருந்தால் பதவி உயர்வு கள் கிடைக்கும், ஆனால் கேங்மேன் என்ற பதவியில் அப்படி இல்லை. மேலும் இந்த பணியாளர்களை எடுக் கும் போது ஆப் லைன் பணிகள் எனக் கூறி எடுத்து விட்டு, அனைத்து வேலை களையும் கொடுக்கிறார்கள். மேலும்,  காலியாக உள்ள 25 ஆயிரம் கள உதவி யாளர்கள் பணியிடத்தை நிரப்பாமல் அந்த வேலைகளையும் கேங்மேனுக்கு கொடுக்கிறார்கள். எனவே அரசு இந்த  போக்கை கைவிட வேண்டும் என  தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவ டிக்கையும் இல்லை. இதனால் இப் போது காத்திருப்புப் போராட்டத்தை துவங்கியுள்ளோம். முதல் நாளிலேயே சுமார் 2000 ஊழியர்கள் கோவையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். இதனால் கோவையில் சிறு மின்  பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பார்ப்ப தற்கு பணியாளர்கள் இல்லை, அரசு உட னடியாக அழைத்து பேசி மின் ஊழியர் களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். ஈரோடு சேலம், மேட்டூர், கோபி, மேட்டூர் அனல், ஜிசிசி, ஈரோடு மற்றும் ஈரோடு உற்பத்தி ஆகிய கிளைகள் சார்பில் ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாயன்று தொடங்கி யது. சங்கத்தின் மண்டலச் செயலாளர் பி.ஸ்ரீதேவி தலைமை வகித்தார். சிஐடியு  மாவட்ட துணைத்தலைவர் எச்.ஸ்ரீராம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மண்டலத் தலைவர் சி.ஜோதிமணி, மாநில துணைத்தலைவர் ஆர்.ஜான் சன், ஆர்.விஜயராகவன், சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.மாரப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத்த லைவர் வி.இளங்கோ நிறைவுரையாற் றினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.