tamilnadu

img

நியாயவிலைக்கடையில் இலவச முகக்கவசங்கள்

தமிழகத்தில் நியாயவிலைக்கடையில் இலவச முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது. 
தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.