அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் திடீரென திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைத்ரேயன், 2002 முதல் மூன்று முறை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததுடன், கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலின் காரணமாக அவர் நீக்கப்பட்டார். அதன் பின்னர், 2023-இல் பாஜகவில் இணைந்தும், 2024-இல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
இவர் இன்று காலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மு.க. ஸ்டாலின் அவருக்கு திமுக உறுப்பினர் அட்டையை வழங்கி, திமுக நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.