tamilnadu

img

ஆம்பூர் அருகே தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

 ஆம்பூர், ஜன. 14- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் குடியிருப்பு மையப்பகுதியில்  அக்பர் என்பவருக்கு சொந்தமான காலனி தொழிற்சாலை குடோன் ஒன்று உள்ளது இந்த குடோனில் மறுசுழற்சி செய்யக்கூடிய காலனி உதிரிபாகங்கள் மற்றும்  தோல் சார்ந்த பொருட்களை குடோனில் வைத்துள்ளார்.  இந்த குடோனில் திடீரென தீப்பற்றிக் கொண்டதால் அப்பகுதி பொதுமக்கள் ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்பு வாகனம் பழுதாகி நின்றதால் அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு வாகனத்தை தள்ளிச் சென்று தீயை அணைக்க உதவினர்.  மேலும் குடோனில் உள்ள தோல் சார்ந்த பொருட்கள் என்பதால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள பள்ளிவாசல் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு பரவியது. இதனால் மேலும் வாணியம்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;