tamilnadu

குடிமனை, நில உரிமைப்பட்டா வழங்குக விழுப்புரம் ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை

குடிமனை, நில உரிமைப்பட்டா வழங்குக விழுப்புரம் ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம், அக். 3- விழுப்புரம் மாவட்டத்தில் புறம்போக்கு களில் குடியிருப்போர் மற்றும் சாகுபடி செய்வோருக்கு குடிமனைபட்டா, நில பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், பெரும்பகுதி கிராமப்புறங்களைக் கொண்ட மாவட்ட மாகும். இந்த மாவட்டத்தில் 929 வரு வாய் கிராமங்கள் உள்ளன. 3 நகராட்சி கள், 7 பேரூராட்சிகள் உள்ளன, 2 வரு வாய் கோட்டங்கள், 9 வருவாய் வட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 7 சட்ட மன்ற தொகுதிகளில் சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் சொந்தமாக குடிமனைப் பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பலவகை புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவு என்று காரணம் காட்டி நீர்நிலைகள், பாட்டை, கோயில் நிலம், மேய்க்கால் புறம்போக்கில் குடியிருக்கும் இவர்களது வீடுகள் சர்வசாதாரணமாக அவர்கள் வசிப்பதற்கான எவ்வித மாற்று ஏற்பாடுகளும் இன்றி இடித்துத் தள்ளப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராமத்தில் கடந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் இடிக்கப் பட்டன. இதுபோன்ற மக்கள் வாழ்வை பாதிக்கும் அநியாய நடவடிக்கைகள் இனிமேலும் மாவட்டத்தில் நடக்காமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பல இடங்களில் நீர்நிலை களாக இருந்த இடங்கள் வகைமாற்றம் செய்யப்பட்டு அரசு அலுவலகங்களாகவும் நீதிமன்றங்களாகவும் கட்டப்பட்டுள்ளன. எனவே, குடிமக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என்ற அடிப்படையில் பலவகைப்பட்ட அரசு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நில வகைமாற்றம் செய்வதற்கான ஒரு குழுவை நிய மித்து ஆய்வு செய்து அவ்வாறு குடி யிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும் குடி மனை இல்லாதவர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்குவதற்கு ஏற்ற விதத்திலும் நில வகைமாற்றம் செய்ய வேண்டும். மேலும், மாவட்டம் முழுவதும் அரசின் சார்பில் மனைப்பட்டா வழங்கப்பட்ட சில இடங்களில் கிராம வருவாய் கணக்கில் ஏற்றப்படாமல் உள்ளன. அவை அனைத்தும் கிராம கணக்கில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.  பல இடங்களில் நில உடமைதாரர்களி டம், அவர்களது நில உடமைக்கான கிரையப் பத்திரம் இருந்தும், அவர்களின் அனுபவத்தில் இருந்தபோதிலும் அந்நிலங்கள் நிலுவை என உள்ளது. அவற்றை அவர்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆங்கிலேயர்கள் காலத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மற்றவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவற்றை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக பலவகையான புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கும் நில உரிமைப்பட்டா வழங்க வேண்டும்.புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு குடி மனைப்பட்டாவும், சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நிலஉரிமைப் பட்டாவும் வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை யில் வலியுறுத்தியுள்ளனர்.