பட்டியலின மக்களின் பட்டா நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்கவேண்டும் கும்மிடிப்பூண்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், செப். 12- பூலலை கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு வழங்கிய பட்டா நிலத்தை அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கும்மிடிப் பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த பூவலை ஊராட்சியில் தனி நபர் ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிர மித்து வைத்திருந்தார். இந்த நிலத்தை கிராம மக்கள் போராடி மீட்டனர். இதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 97 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பட்டாக்களை இதுவரை அளவீடு செய்து உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை. முழுக்க முழுக்க அதிகாரிகள் தான் தவறு செய்துள்ளதால் கொடுத்த பட்டாக்களை ரத்து செய்ய கூடாது என வலியுறுத்தினர். கிணற்றை காணவில்லை தொகுப்பு வீடுகள் கேட்டால், அதிகாரி கள் வீட்டு வரி ரசீது கேட்கிறார்கள். பட்டா மட்டுமே உள்ளது. எந்த இடம் என்று கிராம மக்களுக்கு தெரியவில்லை. பயனாளிகளுக்கு உரிய இடம் இதுதான் என்று அளவீடு செய்து கல் நட்டுயிருந்தால் அங்கே சென்று அம்மக்கள் வீடுகளை கட்டி குடும்பம் நடத்தி இருப்பார்கள். இது குறித்து வியாழனன்று (செப் 11), கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலு வலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உடனடியாக பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதிகாரிகள் தான் தவறுகள் செய்துள்ளனர் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலி யுறுத்தினர். பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்குமார், தனி வட்டாட்சியர் சித்ரா ஆகியோர் பட்டா வழங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது யாரும் அந்த இடத்தில் வீடு கள் கட்டவில்லை என்பதால், கொடுத்த பட்டாக்களை ரத்து செய்கிறோம் என்றனர். இதற்கு தலைவர்கள் எதிர்ப்பைத் தெரி வித்தனர். கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் இந்த நிலையில் அதிகாரிகளின் போக்கை கண்டித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் வெள்ளியன்று (செப் 12), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநில செய லாளர் பி.துளசி நாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், வட்ட துணைத் தலைவர்கள் பி.கருணாமூர்த்தி, வி.ராணி, விதொச மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், பூவலை கிராம கிளை நிர்வாகிகள் சி.முனிரத்தினம், ரோஸ்லி, சண்முகம், மூர்த்தி, பிரதாப், திருமலை, நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.