tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்திவைப்பு

 திருவண்ணாமலை, ஆக.31- திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் செப்,2 அன்று கோட்ட அளவில் நடை பெற இருந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு,  வருகின்ற செப். 9  அன்று நடைபெறும் என்று  மாவட்ட நிர்வாகத்தின் செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

சசிகாந்த் செந்தில் எம்பியிடம்  மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு

திருவள்ளுர், ஆக.31 மாற்றுத்திறனாளி களுக்கான உதவி தொகையை  ஒன்றிய பாஜக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை,  நாடாளுமன்ற கூட்டத் தொடரில், திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.சசிகாந்த் செந்தில் வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாபோர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வலியுறுத்தி யுள்ளனர். தமிழகத்திற்கு கல்வி நிதி கோரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம்  சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் என்.கீதா, பூவைப் பகுதி செயலாளர் எஸ்.தேவா,    மீஞ்சூர் பகுதி செயலாளர், ரவிக்குமார்,  ஆர்.கே.பேட்டை  பகுதி துணைத்தலைவர் , சரோஜா, மற்றும் பகுதி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.