பட்டியலின மக்களின் வீட்டு மனைப் பட்டா அளவீடு செய்ய விவசாய சங்கம் கோரிக்கை
ராணிப்பேட்டை, அக். 6 – பட்டியலின மக்களுக்கு அரசு வழங்கிய பட்டாவின்படி இடத்தை அளந்து அத்து கல் நட்டு வீட்டுமனைகளை குறிப்பிட கோரி விவசாய சங்கம் சார்பில் திங்களன்று (அக். 6) மாவட்ட செயலாளர் எல்சி. மணி தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. வாலாஜா நகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் தெரு காயங்குடியாய் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை இன்றி அவதியுறும் சிரமத்தை போக்க ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலமாக வாலாஜா வட்டம், அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட சர்வே எண். 427/1A மற்றும் 436 ஆகிய இடங்களை தேர்வு செய்து 117 நபர்க ளுக்கு பட்டா வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தை நில அளவையர் மூலம் அளவீடு செய்யாமல் உள்ளனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். அந்த இடத்தை உடனடியாக ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவின்படி இடத்தை அளந்து அத்து காட்டி, அத்து கற்கள்ந ட்டு வீட்டுமனைகளை உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.