tamilnadu

img

தாமதமாகும் எழில் நகர் மேம்பாலப்பணி

தாமதமாகும் எழில் நகர் மேம்பாலப்பணி

சென்னை, ஜூலை 5- சென்னையில், கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், வாகனங்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றன. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி பேருந்துகள் கூட பாதிக்கப்படுகின்றன. இதற்கான தீர்வாக அறிவிக்கப்பட்ட எழில்நகர் மேம்பாலப் பணி தாமதமாகிறது. சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே கேட்டில் தினமும் 50,000க்கும் அதிக மான வாகனங்கள் காத்து கிடக்கின்றன. ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், போக்குவரத்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஸ்தம்பித்து போகிறது. ஆம்பு லன்ஸ்கள், பள்ளி பேருந்துகள் வரிசை யில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படு கிறது. சிலர் நேரத்தை மிச்சப்படுத்தவும், நீண்ட தூரம் சுற்றுவதைத் தவிர்க்கவும் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கிறார்கள். இந்த போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக ரூ.105 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் எழில் நகர் மேம்பாலப் பணி தாமதமாகி வருகிறது. மே 2025க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம், 2முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணிகளால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 2025க்குள் பாலம் கட்டி முடிக்கப்படும் என்றும் ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.ஜெ. எபினேசர் தெரிவித்துள்ளார். கணேசபுரம் மேம்பாலமும் தாமதமாகி வருகிறது. ஆகஸ்ட் 2025க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், இதுவரை 30% மட்டுமே பணிகள் முடிந்துள்ளன. இரண்டு மேம்பாலப் பணிகளும் தாமத மாவதால், பேசின் பாலம் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பொது மக்கள் அவதிக்கு ஆளாகிவருகின்றனர்.