tamilnadu

சாத்தனூர் அணையில் இருந்து  உபரி நீர்வெளியேற்றம்  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்

சாத்தனூர் அணையில் இருந்து  உபரி நீர்வெளியேற்றம்  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கடலூர், அக். 11- சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 6,200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றை பொதுமக்கள் கடக்கக் கூடாது. குளிப்பதற்காகவும் துணி துவைப்பதற்காகவும் ஆற்றில் இறங்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. கால்நடைகளை மேய்க்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களை அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.