tamilnadu

img

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை

தருமபுரி, நவ.22- கடந்த அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் ஏற்கனவே 4 முறை எம்எல்ஏ, 2 முறை அமைச்சராக இருந்துள் ளார். தற்போது பாலக்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ளார்.

அன்பழகன் மீது பாப்பிரெட்டிப் பட்டி ஒன்றியம் மோளையானூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் கிருஷ்ணமூர்த்தி, லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் கொடுத் தார். அந்த புகாரில், கடந்த 2016-2021 ஆம் ஆண்டு வரை, உயர்கல்வித்  துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த் துள்ளார் என்று கூறியிருந்தார்

இதையடுத்து, கே.பி.அன்ப ழகன் மற்றும் உறவினர்கள், நண் பர்களின் வீடுகள் என 58 இடங்களில் சோதனை நடத்தி ரூ. 2 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்தனர். வருமானத்திற்கு அதிகமாக ரூ.45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் சொத்துக்களை வாங்கி குவித்தி ருப்பதாக லஞ்ச ஒழிப்பு காவலர் கள் கண்டுபிடித்து, அதற்கான ஆவ ணங்களும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற நடை முறைகள் தொடங்கியது. முறையாக சம்மன் அனுப்பப் பட்ட நிலையில், முன்னாள் அமைச் சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா(56), மகன்கள் சசிமோகன்(30), சந்திர மோகன்(33), உறவினர்கள் ரவி சங்கர்(45), சரவணன்(47), சரவண க்குமார்(41), மாணிக்கம்(62), மாணிக்கம் மனைவி மல்லிகா(56), தனபால் (45), சரஸ்வதி பச்சையப் பன் எஜூகேசன் அறக்கட்டளை நிர்வாகி ஆகிய 11 பேர் மீது, தரும புரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த னர்.

மே 22 ஆம் தேதி, 10  ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்ற ப்பத்திரிகையை, தருமபுரி மாவட்ட  தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, தரும புரி மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தின் மூலம் சம்மன் விநி யோகம் செய்யப்பட்டு, விசாரணை  தொடங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது. அதன்படி, சம்மந்த ப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 6 ஆம் தேதி தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது, வழக்கு வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலை யில், புதனன்று (நவ.22) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்கு, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணகுமார், மாணிக் கம், மாணிக்கம் மனைவி மல்லிகா, தனபால் உள்ளிட்ட 11 பேர் ஆஜரா னார்கள். அப்போது அவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி மணிமொழி மறு விசார ணையை  வருகின்ற 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.