ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி தட்சண்யா, அமெரிக்க வெளியுறவு துறை நிதியுதவி வழங்கும் ‘The Kennedy-Lugar Youth Exchange and Study (YES)’ திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கு கல்வி பயணமாகச் சென்றுள்ளார்.
பண்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான இத்திட்டத்தின் கீழ், தட்சண்யா அமெரிக்காவின் Belton நகரில் உள்ள Heartland பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அடுத்தாண்டு 12-ஆம் வகுப்பு கல்வியை தமிழ்நாட்டிலேயே தொடரவுள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டம், சர்வதேச அளவில் மாணவர்களுக்கு கல்வியுடன் கூடிய கலாசார அனுபவத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
