tamilnadu

பொறியியல் மாணவர் சேர்க்கை: 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் விண்ணப்பம்....

சென்னை:
நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 1 லட்சத்து 63,826 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் நடப் பாண்டு இளநிலை பொறியியல் சேர்க்கை படிப்புக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்து 63,826 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், 1.32 லட்சம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.இது தவிர 1.21 லட்சம் மாணவ, மாணவிகள் தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதற்கிடையே விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் இணையவழியில் துரிதமாக விண் ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

;