tamilnadu

img

ஆட்சியாளர்களின் கொள்கைகளை எதிர்த்தும் ஊழியர்கள் போராட முன்வர வேண்டும் எல்.ஐ.சி தொழிற்சங்க. கருத்தரங்கில் தலைவர்கள் பேச்சு

ஆட்சியாளர்களின் கொள்கைகளை எதிர்த்தும் ஊழியர்கள் போராட முன்வர வேண்டும் எல்.ஐ.சி தொழிற்சங்க. கருத்தரங்கில் தலைவர்கள் பேச்சு

சென்னை, செப். 21- நிறுவனம், ஊழியர்கள் பாதுகாப்புக்காக போராடும் நாம், ஆட்சியளர்களின் கொள்கைகளை எதிர்த்தும் போராட வேண்டும் என எல்.ஐ.சி. கருத்தரங்கில் தலைவர்கள் ஆவேசமாக பேசினர். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் கோட்டம் 2இன் சார்பில் “இன்சூரன்ஸ் பிரீமி யம் மீதான ஜிஎஸ்டி வரி விலக்கும், கடந்து வந்த போராட்டக் களமும்” என்ற  தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஆர்.சர்வமங் களா தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி.ஆனந்த் பேசுகையில், இதுவரை 56 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத் தில் இருந்து 55ஆவது கூட்டம் வரை இன்சூரன்ஸ் மீதான வரி விலக்குக்காக தொடர்ச்சியாக போராடியது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிரதிபலித்தது. ஆனால் அதேநேரம் ஒரு  தொழிற்சங்கம் எல்லாம் வங்கி ஊழியர்கள் செலுத்தும் குரூப் இன்சூ ரன்ஸ் பிரியமியத்திற்கு மட்டும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரியது. அதில் நாம் வெற்றிபெற்றி ருக்கிறோம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மட்டும்தான் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை நம்முடைய பிரச்சனையாக கருதி போராடுகிறோம். நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் போரா டுகிறோம். ஆனால் பிற தொழிற்சங்கங்கள் உறுப்பினர்கள் பிரச்சனை க்காக மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. 2025இல் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு, 50 விழுக்காடு வரி விதிக்கப் படும் என்று கூறினார். 50 விழுக்காடு வரி விதிப்ப தால் இந்தியா பலவகை யில் கடுமையாக பாதிக்கும். இந்தியா உலகம் முழுவதும் ஏற்றுமதி இறக்குமதி, வர்த்தகம் செய்கிறது. ஏற்று மதி, இறக்குமதியில் ரூ.30 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் போது மட்டும்தான் 4 லட்சம் கோடி  வர்த்தக உபரி கிடைக்கிறது. 4  லட்சம் கோடி வர்த்தக உபரிக்கு டிரம்ப் 50 விழுக் காடு வரி விதித்தால், இந்தி யாவின் வர்த்தகம் பாதிக் கப்படுகிறது. மேலும் ஏராள மான வேலை இழப்புக ளும் ஏற்படும். திருப்பூரில் 1.5 லட்சம் பேர் வேலை  இழக்கும் அபாயம் உள்ள தாக கூறப்படுகிறது. ஆந்திரா, ஒடிசாவில் 15 லட்சம் மீனவர்கள் நேரடி யாக பாதிக்கபடுவார்கள். குஜராத்தில் டைமண்ட் பாலிஷ் செய்யும் தொழி லாளர்கள் பாதிக்கப்படு வார்கள். இப்படி வேலை இழப்பு ஏற்பட்டால் இந்தியா  உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும். ரஷ்ய மலிவு எண்ணையால் யாருக்கு லாபம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை மோடி நிறுத்தி  இருந்தால் இந்த ஆபத்தில் இருந்து இந்தியா தப்பி யிருக்கும். ஆனால் ரஷ்யா விடம் இருந்து கச்சா  எண்ணை யாருக்காக வாங்கப்படுகிறது என்றால் அம்பானிக்கும், நயாரா என்ற நிறுவனத்திற்கும். உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் அம்பானியிடம்தான் உள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 12 லட்சம் பேரல்  எண்ணை சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் 80  டாலர் விற்ற போது, ரஷ்யா விடம் இருந்து 50 டாலரு க்கு இறக்குமதி செய்து, ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு பேரலுக்கு 15 டாலர் கூடுதல் லாபத்துடன் விற்பனை செய்யப்படு கிறது. அதனால்தான் ஆட்சி யாளர்களுக்கு அம்பானி யின் நலன்தான் முக்கிய மாக உள்ளது. மக்களை திசை திருப்பும் பிரதமர் சுதந்திர தினத்தன்று சுதேசி பொருட்களை வாங்கு ங்கள் எனக் கேட்டுக் கொண்ட மோடி, இன்சூ ரன்ஸ் துறையில் 100 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிக்கப் போகிறோம் எனக் கூறுகிறார். அப்படியென் றால் இவர்களின் சுதேசி கொள்கை என்ன என்பதை யும், ஆட்சியாளர்கள் யாருடைய நலனுக்காக பாடு படுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இன்சூரன்ஸ் நிறு வனம், ஊழியர்கள் பாது காப்புக்காக போராடும் நமது  ஊழியர்கள் , ஆட்சியா ளர்களின் கொள்கைகளை எதிர்த்தும் போராட வேண்டும்  என்றார். எல்ஐசி அகில இந்திய முகவர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.தாமோதரன் பேசுகை யில்,  பொருளாதாரத்தையும் அரசியலையும் பிரித்து பார்க்க முடியாது. இரண்டை யும் இணைத்து பார்க்க வில்லை என்றால் இதை விட மோசமான நிலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில், பொரு ளாதாரத்தை சீராக வைத்துக் கொண்டிருப்பதிலே பொதுத்துறை நிறுவனங் களின் பங்கு அதிகம். அதனால்தான் பொதுத் துறை நிறுவனங்களை பாது காக்க வேண்டும் என்று போராடுகிறோம் என்றார். கார்ப்பரேட் நலனை மட்டுமே கருதக்கூடிய ஒன்றிய பாஜக அரசை தூக்கி எறிவதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக தலைவர் கே.மனோகரன் வரவேற் றார். துணைத்தலைவர் ஜி.பலராமன் நன்றி கூறினார். இதில் பொருளாளர் வி.ஜானகிராமன், மண்டல இணைச் செயலாளர் ஆர்.கே.கோபிநாத், உதவி பொருளாளர் ஆர்.கிரண் குமார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.