tamilnadu

img

ஊதிய முரண்பாடுகளை களைத்திடுக!

ஊதிய முரண்பாடுகளை களைத்திடுக!

பழைய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக அமல்படுத்துதல், முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களைதல், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ வைத்துள்ள கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவர் ஆ.ஜேம்ஸ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாநிலத் தலைவர் சே.பிரபாகரன், மாவட்டச் செயலாளர் டி. குமார், மாவட்ட பொருளாளர் பி.குமார்,  முன்னாள் மாவட்டத் தலைவர் வே.விஸ்வகேது, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் மூ.சீனுவாசன், உள்ளிட்ட பலர் பேசினர்.