கோவிலுக்குள் புகுந்த யானை பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
கோவை, அக்.3- கோவை பூண்டி வெங் ளிங்கிரி ஆண்டவர் கோவி லுக்குள் புகுந்த காட்டு யானையை கண்டு பக்தர் கள் அலறியடித்து ஓடினர். கோவை தொண்டா முத்தூர், ஆலாந்துறை மற் றும் பூண்டி வனப் பகுதி களில் இருந்து வெளியே றும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் உலா வருகிறது. இதில் பூண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை காட்டு யானை அங்குள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில் உணவு தேடியும், தண்ணீருக்காக வும் அங்கு வரும். அதனை தடுக்க வனத்துறையினரின் ஆலோசனையை ஏற்று உணவுப் பொருட்கள், பழங்கள், பிரசாதங்களை வெளியே கொட்டுவதை கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இருப்பினும் அவ்வப்போது வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு வரும் ஒற்றைக் காட்டு யானை அங்குள்ள உணவுக்கூடத்தின் அருகே வந்து சென்றது. இந்நிலை யில் கடந்த சில வாரங்களாக அங்கு யானையின் நட மாட்டம் இல்லாத நிலையில், வியாழனன்று மாலை திடீரென வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற் றைக் காட்டு யானை கோயில் வளாகத்தில் உலா வந்தது. குறிப்பாக உணவுக்கூடம், கோயில் அலுவல கம் என வளாகத்தில் உலா வந்த யானை, திடீரென கம்பியை உடைத்துக் கொண்டு வெள்ளிங்கிரி ஆண்ட வர் கோவிலுக்குள் புகுந்தது. அப்போது யானையைக் கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பெரி யவர்களும் குழந்தைகளை கையில் தூக்கிக்கொண்டு ஓடினர். பின்னர் கோவிலின் இடது புறத்தில் இருந்த நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் பத்திரமாக வெளி யேறினர். சிறிது நேரம் உலாவிய பின் மீண்டும் யானை வந்த வழியாக வெளியே சென்று வனப் பகுதிக்கு சென் றது. திடீரென பக்தர்கள் அதிகமாக இருந்த நேரத்தில் காட்டு யானை வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே அங்கு வந்த வனத்துறையினர் மீண்டும் யானை கோயில் வளா கத்திற்கு வராமல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பக்தர் கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.
