tamilnadu

img

மின்சார வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மின் நுகர்வோர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின்வாரியத்தை தனியார்மயப்படுத்திட வகை செய்யும் அரசாணை 6, 7 ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை (ஆக.19) திட்டத் தலைவர் கே.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் எம்.சிவக்குமார்,  பொருளாளர் எஸ்.வெங்கடேசன், துணைத் தலைவர் ஆர்.ஏழுமலை, கே.ஜெகசெந்தில், முன்னாள்  தலைவர் கே.சலீம், செயலாளர் ஆர்.ராஜாமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.