tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

சென்னையில் மீண்டும் மீண்டும் மின்ஊழியர்கள் கைது

சென்னை, அக். 8 - கேங்மேன் கோரிக்கைளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்திய மின்வாரிய ஊழியர்களை காவல்துறை யினர் மீண்டும் மீண்டும் கைது செய்தனர். கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும், சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் தருவ தோடு, கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு உள்முகத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், 6 சதவீத ஊதிய உயர்வு தர வேண்டும். மின்னோட்டம் இல்லாத இடங்களில் மட்டுமே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.7 முதல் 12 மையங்களில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதன் ஒருபகுதியாக சென்னை கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.கண்ணன், பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர் உள்ளிட்ட 350 பேரை அக்.7 இரவு காவல்துறையினர் கைது செய்து 4 இடங்களில் சிறை வைத்தனர். மறுநாள் காலை விடுவித்தனர். இதனையடுத்து அனைவரும் மீண்டும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் போராட்டத்தை தொடர வந்தவர்களை மீண்டும் காவல்துறையினர் கைது செய்து 4 மையங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

நடிகர் துல்கர் சல்மானின்  வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை, அக்.8- பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானின் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதனன்று (அக்.8) அதிரடி சோதனை மேற்கொண்டனர். மம்முட்டிக்கு சொந்தமான இந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாத நிலையில் ஊழி யர்கள் மூலம் திறந்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்  படவில்லை. இருப்பினும், கடந்த மாதம் கேரளாவில் மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை சோதனை நடந்தது. பூட்டானில் சொகுசு கார்களை வாங்கி, வரி குறைத்து மதிப்பீடு செய்து இந்தியாவில் விற்பனை செய்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையா என்பது சோதனை முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.88 லட்சம் தங்கம் பறிமுதல்: சென்னை பயணிகள் 2 பேர் கைது

சென்னை, அக்.8- சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.88 லட்சம் மதிப்புள்ள 789 கிராம் தங்கம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த தனியார் விமானத்தில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பயணிகள் சுற்றுலா விசாவில் சென்று திரும்பினர். சுங்கத்துறை ஏர் இன்டெலி ஜென்ட் அதிகாரிகள் கண்காணிப்பில் இவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக ஆய்வு செய்தனர். இவர்களின் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டி மற்றும் தங்கப் பசை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இருவரிடம் இருந்தும் மொத்தம் 781 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், இரு வரும் முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ளதும், தங்கம் கடத்தும் கும்பல் புதிய முகங்களை குருவி களாகப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. முதல் முறையிலேயே இவர்கள் சுங்கத்துறையிடம் சிக்கி யுள்ளனர். சிங்கப்பூருக்கு இவர்களை அனுப்பி வைத்த முக்கிய நபரை கண்டறிய சுங்க அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். விதிமீறி இயங்கிய வாகனங்களுக்கு ரூ.26லட்சம் அபராதம் காஞ்சிபுரம், அக்.8-  காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விதிமுறைகளை மீறி இயங்கிய 178 வாக னங்களுக்கு ரூ.25 லட்சத்து 93 ஆயிரத்து 271 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவின்படி, காஞ்சி புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலை மையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில், விதிமீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாக னங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காத ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாயில் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள் என விதிமீறி இயங்கிய 178 வாகனங்கள் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தும், வாகனத்தை சிறை பிடித்தும் அபராதம் வசூலித்தது என ஒரே மாதத்தில் மொத்த மாக ரூ.25 லட்சத்து 93 ஆயிரத்து 271 அபராதம் வசூலிக்கப்  பட்டது. அப்போது, விதிமீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஓட்டுநர் உரிமம், தகுதி சான்று, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனம், அதிகளவில் பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

அரசு ஊழியர் சங்க  கிண்டி பகுதி பேரவை

சென்னை, அக். 8 - தேர்தல் வாக்குறுதி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறை நிறு வனங்கள்  உள்ள தொகுப்பு ஊதியம், அவுட்சோர்சிங், தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கிண்டி பகுதி பேரவை செவ்வாயன்று (அக்.7) பகுதி தலை வர் ஆர்.அமரேசன் தலைமையில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.சாலக்குமார், எஸ்.கண்ணன், தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.ரமேஷ்,  செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில துணைத் தலைவர்  டி.அஸ்வினி கிரேஸ்  ஜயப்பிரியா உள்ளிட்டோர் பேசினர். செயலாளர் ஜி.ஹரிஹரன் வேலை  அறிக்கையும், பொருளாளர் டி.சொர்ணபாண்டியன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். ஏ.எஸ். தக்ஷிணாமூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக எம்.பாரிவள்ளல் வரவேற்றார்.

கழிவுநீர் தொட்டியில் கிடந்த குழந்தை சடலம்!

சென்னை, அக். 8- சென்னை கொடுங்கையூரில் கழிவுநீர் தொட்டியில் கிடந்த குழந்தை சடலத்தை மீட்டு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.   கொடுங்கையூர் திருவள்ளுவர்நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அ.முகமது ரபீக் (48). இவர், வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.   ரபீக், வீட்டில் இருந்து செல்லும் கழிவுநீர் குழாயில் செவ்வாய்க்கிழமை அடைப்பு ஏற்பட்டது. இதேபோல அந்த தெருவின் பிரதான கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக அந்த தெருவில் உள்ள வீடுகளில் கழிவுநீர் வெளியேறவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த தெருவில் உள்ள கழிவுநீர் குழாய்கள் இணையும் தொட்டியை திறந்து பார்த்தனர்.   அப்போது அங்கு பிறந்து சில நாள்களே ஆன ஒரு ஆண் சிசு சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கொடுங்கையூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குழந்தை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அந்த குழந்தையின் பெற்றோர் யார்?, குழந்தை எப்படி இறந்தது? என காவல் துறையினர் விசாரணை செய்கின்றனர்.