tamilnadu

img

தேர்தல் கால வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

தேர்தல் கால வாக்குறுதிகளை  விரைந்து நிறைவேற்ற வேண்டும்

ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் மாநாடு கோரிக்கை

திருவண்ணாமலை, ஆக. 23- தேர்தல் கால வாக்குறுதிகளை திமுக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருவண்ணாமலையில், 3வது மாவட்ட மாநாடு மற்றும் திருவண்ணாமலை முதல் கோட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் பத்மநாப மூர்த்தி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கோட்டத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பிரபு துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். இனியன் செயலாளர் அறிக்கையும், மாவட்டப் பொருளாளர் கருணாகரன் நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர்.  மாநிலச் செயலாளர் சி. சுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பரிதிமால் கலைஞன், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் பா.ரவி நிறை உரையாற்றினார். செய்யார் கோட்டத் தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார். தீர்மானம் தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும், ஓய்வு பெறும் நாள் அன்று தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும், ஓய்வூதியர்களுக்கு குறைவு கூட்டம் நடத்த வேண்டும், 01.04.2003 க்கு பின்னர் பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.