tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி... ஆகாயத்தாமரை செடிகளை அகற்றிய பொதுப்பணித் துறையினர்

தீக்கதிர் செய்தி எதிரொலி... ஆகாயத்தாமரை செடிகளை அகற்றிய பொதுப்பணித் துறையினர்

சிதம்பரம், அக்.15- சிதம்பரம் நகரத்தையொட்டி செல்லும் கான்சாகிப் பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீர் வழியை அடைத்துள்ளது. இது மழைக்காலங்களில் வாய்காலில் நீரோட்டம் தடைபடும் சூழலை ஏற்படுத்துகிறது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.  இதனை தீக்கதிர் நாளிதழ் கடந்த 8- தேதி இதழில் படத்துடன் செய்தி வெளியிட்டது.  இந்த செய்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளம் மூலம் பதிவு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் அக்.15அன்று பொக்லின் இயந்திரம் மூலம் பாசன வாய்க்காலை அடைத்திருக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணியில் பொதுப்பணி துறையினர் ஈடுபட்டனர்.  உடனடியாக நடவடிக்கை எடுத்த பொதுப்பணி துறையினருக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.