சென்னை, ஜூலை 11- தீக்கதிர் செய்தி எதிரொலியாக, வடசென்னை அனல் மின் நிலையம் எதிரே உள்ள வேகத்தடையை பொதுப்பணி துறை யினர் சீரமைத்தள்ளனர். வடசென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலை யில், விதிமுறைகளை மீறி வேகத்தடை அமைக்கப் பட்டுள்ளது. மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அதில் மோதி விபத்திற்கு உள்ளாகின்றனர். இதனை சீரமைக்க வலியுறுத்தி ஜூலை8 அன்று தீக்கதிரில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 10 அன்று பொதுப்பணித்துறையினர், வேகத்தடையை சீரமைத்து வண்ணங்கள் தீட்டினர்.