சென்னை சௌகார்பேட்டையில் பெருமாள் முதலி தெருவில் சுகன் என்டர் பிரைசஸ் என்ற கடையில் இந்திய அறிவுச்சொத்துரிமை பிரிவு காவல்துறையினர் கடந்த 30 ஆம் தேதி நடத்திய திடீர் சோதனையில் கேனான் நிறுவனத்தின் பெயரில் காப்புரிமை இல்லாமல் போலியாக தயாரிக்கப்பட்ட டோனர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் இதே தெருவில் உள்ள அன்ரிக்ஷா என்டர் பிரைசஸ் கடையில் நடத்தப்பட்ட சோதனையிலும் போலியான தயாரிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.