tamilnadu

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

வேலூர், ஏப்.25-உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக் கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.ஏ. ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள 2019-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர் தலை முன்னிட்டு ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைத் தல் சம்பந்தமாக உத்தேசிக் கப்பட்டு வரைவு வாக்குச் சாவடி பட்டியல் மாவட்ட ஆட்சியரால் ஒப்புதல் அளிக் கப்பட்டு, ஏப்ரல் 23 முதல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, மாவட்டத் தேர்தல் அலுவலகம் (மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிப் பிரிவு), ஆணையர், வேலூர் மாநகராட்சி, மண்டல இயக்குநர், நகராட்சி நிர்வாகம், உதவி இயக்குநர், பேரூராட்சிகள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), திருப்பத்தூர், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வேலூர், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சிற்றூராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் வைக்கப் பட்டுள்ளது.வரைவு வாக்குச் சாவடி பட்டியலில் உள்ள வாக்குச் சாவடிகள் சம்பந்தமாக கருத்து தெரிவிக்க வேண் டும் எனில் ஏப்ரல் 30-ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில், எம்எல்ஏக்கள், எம்.பி.க் கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தில் தெரிவிக்கலாம். இறுதி வாக்குச் சாவடி பட்டியல் மே 4-ஆம் தேதி வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;