tamilnadu

img

வாய்ப்பு வாசல்

வங்கி அதிகாரிகள் - 5,208 காலியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கிகளில் 11  வங்கிகள் அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளன. 5,208 காலிப் பணியிடங்களுக்கான அறி விக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். 11 வங்கிகளில் இந்தியன் வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளிடம் இருந்து காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தரப்படவில்லை. மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இதில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்தகுதி - ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருத்தல் அவசியமாகும். வயது - ஜூலை 21, 2025 ஆம் தேதி யன்று 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது  வரம்பில் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத் திற னாளிகளுக்கு தளர்ச்சி வழங்கப்படும். தேர்வு முறை - ஆன்லைன் வாயி லான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என்று இரண்டு கட்டங்கள் உள்ளன.  தவறாக எழுதப்படும் விடைகள் ஒவ்வொன்றுக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.  எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறு பான்மையினருக்கு தேர்வுக்கு முன்பாக  கட்டணம் இல்லாமல் பயிற்சி  வழங்கப்படும். விண்ணப்பத்தை நிரப்பு கையில் பயிற்சியில் கலந்து கொள்வ தற்கான விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும், கூடுதல் விபரங்களைப் பெறவும் www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பத்தை நிரப்பக் கடைசித்தேதி ஜூலை 21, 2025 ஆகும்.

ஐடிஐ படித்தவர்களுக்கு 1,850 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் ராணுவ கனரக வாகனத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்தத் தொழிற்சாலை ஆவடியில் (சென்னை) அமைந்திருக்கிறது.  இதில் இளநிலை தொழில்நுட்பப் பணியாளர் பணிக்கு ஐடிஐ படித்தவர்களைக் கொண்டு நிரப்புகிறார்கள். இதே தொழிற்சாலையில் தொழில் பழகுநராகப் பயிற்சி எடுத்தவர்களுக்கும், முன் பணி அனுபவம் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். வயது - அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி உள்ளது.  தேர்வு முறை - பணி சார்ந்த தேர்வு நடத்தப்படும். முன் அனுபவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  விண்ணப்பத்தை நிரப்ப, பணியிடங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.oftr.formflix.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.  விண்ணப்பத்தை நிரப்பக் கடைசித் தேதி ஜூலை 19, 2025.

தொழில் பழகுநர் (Internship)

ராணுவ ஆய்வு மேம்பாட்டுக் கழகத்தில்(Defence Research Development Organisation) உதவித் தொகையுடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொறியியல் மற்றும் எம்எஸ்சி படித்தவர்களுக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது. இது குறித்த விபரங்களைத் தெரிந்து கொள்ள www.drdo.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்க ஜூலை 11, 2025 கடைசித் தேதி ஆகும். •••••

விண்ணப்பித்தாயிற்றா?

பாரத ஸ்டேட் வங்கியில்  541 அதிகாரிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியிருந்தது(தீக்கதிர் வாய்ப்பு வாசல் - ஜூலை 03, 2025). விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூலை 14, 2025 ஆகும்.