tamilnadu

மலைக் கிராமங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவிய கழுதைகள்

சென்னை, ஏப்.19- கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி , நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங்களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. தேர்தலில் பயன் படுத்தப் படும் வாக்குப்பதிவு இயந் திரங்களை இடம் மாற்றுவதற்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட வாக னங்கள் பயன் படுத்தப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தின் மலைப் பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும் உபகரணங் களையும் இடம் மாற்ற ஜி.பி.எஸ் தொழில் நுட்பங்களை பயன்படுத்த முடியாது.மலை உச்சியில் உள்ள சில குக்கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங் களை எடுத்துச் செல்வது கடின மான பணி. சில பகுதி களுக்கு வாகனங்களில் செல்ல வழியே இல்லை. தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலுள்ள தொலைதூர கிராம வாக்குச்சாவடிகளுக்கும் சுமார் 300 முதல் 1100 வாக்காளர்கள் உள்ளனர்.


தர்மபுரி மாவட் டம் பென்னாகரம் பகுதி யிலுள்ள கோட்டூர், நாமக்கல் மாவட்டம் போத மலை போன்ற பகுதிகள் பாறைகள் நிறைந்த கரடு முரடானவை.இந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், உப கரணங் களையும் தேர்தல் அதிகாரிகள் சாக்குப்பைகளில் கட்டி கழுதைகளிலும், குதிரைகளிலும் ஏற்றி தொலைதூர வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சிலர் பொருட்களை தலையில் சுமந்தபடி சென்றனர். இவர்கள் மலைப் பகுதிகளில் 9 முதல் 11 கி. மீ. தொலைவுக்கு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி மற்றும் பள்ளத்துக்காடு, நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங்களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டன.

;