தண்டையார்பேட்டையில் சிறுமியின் முகத்தை குதறிய நாய்
சென்னை, ஆக. 4- சென்னை தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுமியின் முகத்தில் ராட்வீலர் நாய் கடித்து குதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகரை சேர்ந்தவர் வேலு. இவரது வீட்டில் ஆட்டோ ஓட்டுநரான ராஜா என்பவர், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு குடியேறினார். ராஜாவின் மகள் ஸ்மித்திகா ஶ்ரீ (7), ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய போது, வீட்டின் உரிமையாளர் வேலு வளர்த்து வந்த வெளிநாட்டு ராட்வீலர் நாய் சிறுமியின் முகத்தில் கடித்து குதறியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை ராஜா உடனே நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றி சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரீப் பருவ பயிர் காப்பீடு செய்ய ஆக.14 வரை கால நீட்டிப்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம், ஆக.4- காஞ்சிபுரம் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரி வித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு காரீப் பரு வத்தில் (தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது செய்யும் பயிர்பருவம்) சொர்ணவாரி நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு கடந்த ஜூலை 31 வரை அவகாசம் இருந்தது. இந்நிலையில், மேலும் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையும் விதத்தில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரீப் பருவத்தில் அறி விப்பு செய்யப்பட்டுள்ள பகுதிக்கு நெற்பயிருக்கு வரும் 14ம் தேதி கடைசி நாள் ஆகும். இத்திட்டத்தில் காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் காப்பீடு செய்ய வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. நெல் I பயிருக்கான விதைப்புக்காலம் மே முதல் ஜூன் ஆகும். ஆகையால் நெல் I (சொர்ணவாரி) பயிரி டும் விவசாயிகள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.726 பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள லாம். தங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு தங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திட்டமிடாத வடிகால் பணி காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர்
பல்லாவரம் ஆக.4- பல்லாவரம் அருகே திட்டமிடாத வடிகால் பணி காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஆண்டாள் நகர், ராமானுஜர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பொழிச்சலூர் முதல் கவுல் பஜார் வரை செல்லும் பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்றது. அவ்வாறு, கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் அனைத்தும் சரியான மட்டம் பார்த்து, தரை உயரத்திற்கு கட்டாமல், தரையை விட சற்று உயர மாக கட்டியுள்ளனர். இதனால், இப்பகுதிகளில் கழிவு நீர் வெளியே வழியின்றி, குடியிருப்புகளை சுற்றி தேங்கி யுள்ளது. மழைக்காலங்கள் மட்டுமின்றி, எப்போதுமே கழிவு நீர் தேங்குவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அத்து டன், கொசு உற்பத்தி அதிகரித்து காய்ச்சலால் பலர் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘முறையான திட்டமிடல் இன்றி வடி கால் அமைக்கப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் வடி கால் வழியாக தண்ணீர் அடையாறு ஆற்றில் கலக்க முடி யாமல், கழிவுநீருடன் கலந்து, குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது.
சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் குறித்து ஆய்வு
சென்னை, ஆக.4- சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் மற்றும் சாத்தியக் கூறுகள் குறித்து செவ்வாய்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மாநகராட்சி, நீர்வளத்துறை, போக்குவரத்து தறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். செய்கின்றனர். முதல் கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை படகு போக்குவரத்து சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
கட்டடத்தின் மேல் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு
சென்னை, ஆக. 4- சென்னை வடபழனி மாநகராட்சி கழிப்பறை கட்டடத்தின் மேல் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (52). இவர், பெயிண்டராக வேலை செய்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி மதுபோதையில் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி கழிப்பறை கட்டடத்தின் மேல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை படுத்து தூங்கினார். அப்போது திடீரென அந்த தளத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி திங்கட்கிழமை உயிரிழந்தார்.